top of page

தாழி பற்றி...

logo.jpg

பிறப்பு எப்படி இயல்பானதோ, - அவ்வாறே இறப்பு என்பதும்‌ இயல்பான நிகழ்ச்சிதானே ... பிறந்த  உயிரிகள்‌ ஒவ்வொன்றும்‌ உரிய கால இறுதியில்‌ உறப்பனவே! இறந்து தீர்வனவே! இடையில்  - அல்லது தொடக்கத்திலேயே கூட நேர்ச்சியால் மறைவெய்தலாம்| “எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டனதாம்‌” என்னும்‌ இயற்கைப்‌ பெருநெறிக்கு இந்தப்‌ பிறப்பும்‌ இறப்பும் உட்பட்டனவே ! என்றேனும்‌ ஒரு நாளில்‌ நாம்‌ இறப்பது உறுதி என்னும்‌ வமய்த்‌ தெளிவை அனைவர்க்கும்‌ உருவாக்குதற்கு அவ்வக்கால அறிஞர்‌ பெருமக்களும்‌ “நிலையாமை” பற்றி, மிக நிரம்ப வாழ்வின்‌ இறுதிப்பகுதியில்‌ அறுதிலயய்தி உயிர்‌ பிரிந்த உடலினை, அன்பும்‌, பண்பாட்டு வளமும்‌, நாகரிகச்‌ எழுமையும்‌, நன்றியுணர்வும்‌ நிரம்பியிருந்த பண்டையசுற்றமும்‌ - உற்றமும்‌ அமைவாகவும்‌ மிக நன்‌ மதிப்புடனும்‌ அடக்கம்‌ செய்தன !இறந்த உடலினை அடக்கம்‌ செய்யும்‌, ஐந்து வகைப்பட்ட வழக்கங்கள்‌ - ஆங்காங்கும்‌ உற்றிருந்த நாகரிகப்‌ பகுதிகளுக்கேற்பக்‌ கடைபிடிக்கப்‌ பெற்றிருந்தமையை வரலாற்றுள்‌ நாம்‌ உணர்கின்றோம்‌! ஒன்று, சுட்டெரித்துவிடுவது ! இரண்டாவது, மிகத்‌ தொலைவான ஓரிடத்துக்கு அவ்வுடலினைச்‌ சுமந்துசசன்று அங்கேயே தூக்கிப்போட்டு  வந்துவிடுவது! மூன்றாவது, உரிய அளவில்‌ குழியினைத்‌ தோண்டிப்‌ பிணத்தை அதனுள்ளாக இறக்கி - இட்டு மண்ணைப்‌ போட்டூ மூடிவிடுவது! நான்காவது, இயற்கையாகவே கிடக்கும்‌ தாழ்ந்த பள்ளத்தில்‌ பிணத்தை இட்டு மண்ணிட்டூ நீரவி விடூவது ! ஐந்தாவது, பெரிய மண்கலனாகிய தாழியினுள்‌ பிணத்தை இட்டூ மூடிப்‌ பள்ளம்‌ பறித்துப்‌ புதைத்துவிடுவது! இவ்வகையிலாக, ஐந்து முறைகள்‌ இருந்தமையை 18000 - ஆண்டுகளுக்கு முற்பட்டெழுந்த மணிமேகலைப்‌ பாவியம்‌. 

 

சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்

தாழ்வயின் அடைப்போர் தாழ்வயிற் கவிப்போர் ‌ (மணிமேகலை : 6: 66-67 ஆம்‌ வரிகள்‌ 

அன்பும்‌ அறிவும்‌ நிறைந்த என்‌ அருமை  நெஞ்சத்தீரே!... வணக்கங்கள்‌. 

என்‌ பெயர்‌ தாழி!... அரசுப்‌ பதிவேட்டினுள்‌ ஒரு தன்னார்வத்‌ தொண்டு அறக்கட்டளையாக நான்‌ என்னைப்‌ பதிந்துகொண்டுள்ளேன்‌! இதன்வழி நான்‌ புதிய பிறப்பெடுத்துள்ளேன்‌ !அரசுப்‌ பதிவேட்டிற்கும்‌ - திடுமெனப்‌ பார்க்கும்‌ பிறருக்கும்‌, புத்தம்‌ புதியவளாகத்‌ தோன்றினாலும்‌-நான்‌ மிகமிகப்‌ பழமையானவள்‌!... மேலும்‌, மிகமிக மூத்தவள்‌! ... இச்செய்தியை, இவ்வுலகம்‌ நன்கு அறியும்‌! என்‌ காலம்‌ மிகவும்‌ புதியது என்கின்றனர்‌,ஆய்வறிவே இல்லாத சிலர்‌!

என்‌ காலமோ, ஆயிரம்‌ ஆண்டூகள்தாம்‌ என்கின்றனர்‌, சிலர்‌! 3000-ஆண்டுகள்‌, 5000-ஆண்டுகள்‌, 10000- ஆண்டுகள்‌ என்றவாறு, வேறுவேறு காரணங்கள்‌ கூறி, மாறுபட்டூம்‌ கூறுபட்டும்‌ கருத்துரைத்து வருகின்றனர்‌, சிலர்‌! ஆமாம்‌!...ஒவ்வொருவரும்‌ ஒவ்வொரு நிலையிலாக!...இவையாவற்றையும்‌ தாண்டி, மிகப்‌ பல தலைமுறைகளுக்கும்‌ மிக முன்னரேயே உருவாகி -பயனாகி - நீறைவாக நிலைத்து நிற்பவள்‌. நான்‌ !...

 

இம்மண்‌ நிரம்பவும்‌ நன்மனம்‌ நீரம்பியவராய்‌ முந்தி வாழ்ந்தவர்கள்‌ - நான்‌ வீழாது உயிர்த்திருக்கும்‌ - உரு நிலைத்திருக்கும்‌ இடங்களிலெல்லாம்‌ நிலைத்து வாழ்கின்றார்கள்‌! மிகப்‌ பல்லாயிரம்‌ ஆண்டுகள்‌ காலப்‌ பழமையினால்‌-மிகப்‌ பல இடங்களில்‌, நான்‌ மண்௭ணாடூ மண்ணாகிப்‌ போனேன்‌! அவர்களும்‌, என்னோடூ மண்ணாகி மட்கிக்‌ கரைந்து மறைந்தனர்‌ !

தாழிய பெருங்காடு” என்றவாறு, புறநானூற்றுள்‌3664-ஆம்‌ பாட்டினுள்‌ 13-ஆம்‌ வரியுள்‌ வரும்‌வரலாற்றுப்‌ பதிவுத்தொடர்‌ - பண்டைய புதைப்புமுறை நெறி வழக்கையும்‌ - செயற்பாட்டுப்‌ பெரும்பரப்பையும்‌ தெரிவிப்பதாகும்‌!

 

என்றவாறு, பதிவுசெய்துள்ளமை இவ்விடத்தில்‌ எண்ணிப்பார்க்கத்‌ தக்கதாகும்‌! என்‌ பெயரைத்‌ “தாழி” என்றவாறு மிகப்‌ பண்டைய நம்‌ முதுமுன்னோர்‌ சுட்டியுள்ளமையுள்‌ - அதாவது சுட்டிக்‌ குறிப்பிட்டுள்ளமையுள்‌ அமைந்துள்ள மொழியியல்‌ உண்மைகள்‌ சிலவற்றை உங்களுக்கு நான்‌ விளக்க விரும்புகின்றேன்‌!


“தாழ்தல்‌” என்னும்‌ சொல்லுக்குக்‌ “ கீழிருத்தல்‌” என்பது வபாருளாகும்‌! (தங்கியிருத்தல்‌ என்பது அடியிற்பொருந்தியிருத்தல்‌-அதாவது, கீழ்‌ அமைதல்‌!) பள்ளம்‌ பறித்து - அதாவது, ஆழ்ந்த குழியினைத்‌ தோண்டி அதனுள்ளாக உடலினை இட்டூ மூடிப்‌ பொருந்தியிருக்குமாறு அமைப்புறுத்தப்‌ பெறும்‌ பெரிய மண்கலம்‌ - இத்தாழ்தல்‌” என்னும்‌ கருத்தின்‌ அடிப்படையில்‌ தாழ்‌ * இ - “ தாழி” என்றவாறு குறிப்பிடப்‌ எபற்றுள்ளது! அப்படியாக, - நான்‌  குறிக்கப்பட்டுள்ளேன்‌!

(பிணத்தை உள்ளாகும்படி இட்டு மூடிப்‌ புதைக்கப்‌ பயன்பெற்ற மிகப்‌ வபரிய பானை “தாழி” எனப்‌ பெற்றது .உடலினை உள்வைத்த பின்னர்க்‌ கட்டாயமாக மூடிப்புதைக்கும்‌ முறைமை கடைபிடிக்கப்‌ பெற்றுள்ளது! புறநானூற்றுள்‌ வரும்‌ 228 - ஆம்‌ செய்யுளின்‌ 12 -ஆம்‌ வரியுள்‌ பதிவுற்றுள்ள “ அன்னோன்‌ கவிக்கும்‌ கண்‌ அகல்‌ தாழி ” என்றவிடத்தும்‌, அந்நூலின்‌ 238 - ஆம் செய்யுளின்‌ முதல்‌ வரியுள்‌ பதீவுற்றுள்ள “கவிசெந்தாழிக்‌ குவிபுறத்து'' என்றவிடத்தும்‌,நற்றிணையுள்‌ 271 - ஆம்‌ செய்யுளின்‌ 11-ஆம்‌ வரியுள்‌ பதிவுற்றுள்ள “மாஇருந்‌ தாழி கவிப்ப” என்றவிடத்தும்‌ - மேற்குறித்துள்ள மூடிப்‌ புதைக்கும்‌ உண்மையை நாம்‌ தெளிவாக உணருகின்றோம்‌! “கவித்தல்‌” என்பது, மூடூதலாகும்‌ ! )

நிலைபெறுமாறு உள்‌ அமையும்படியும்‌ - தாழ்‌ நிலையாகிக்‌ கீழமைந்திருக்கும்படியும்‌ நின்று,புதைப்புக்ககனப்‌ பயன்பட்ட “தாழி” என்னும்‌ நான்‌, பிணத்தை உள்ளடக்கிக்‌ கிடத்தற்லகனவே உருவாக்கப்‌பபற்ற பண்டைய மண்கலம்‌ ஆவேன்‌! அதாவது, ஆனேன்‌!

 

இறந்த உடலினை உள்ளிட்டூ மூடிப்‌ புதைக்கப்‌ பயன்பெற்ற “தாழி” என்னும்‌ பெயரிய என்‌ மண்கல வகை- பிற பயன்பாடுகளுக்கும்‌ காலச்‌ சுழற்சிக்கிடையே மாந்தவாழ்வில்‌ மேற்கொள்ளப்‌ பெற்றுள்ளது! இந்நிலைகளால்‌ - உண்மையான அடிப்படைச்‌ சிறப்புக்‌ காரணத்தைக்‌ குறித்து மீண்டும்‌ அடைசேர்த்துச்‌ சுட்டப்பறவேண்டிய நிலையை நான்‌ எய்தினேன்‌! அத்9தளிவுப்பெயர்‌, “ஈமத்தாழி” என்பதாகும்‌! “வியல்மலர்‌ அகன்பொழில்‌ ஈமத்தாழி”
என்றவாறு வந்துள்ள புறநானூற்றில்‌ உள்ள 256- ஆம்‌ செய்யுளின்‌ ஐந்தாம்‌ வரியினுள்‌ இப்பதிவினைத்‌ எதளிவாகக்‌ காணமுடிகின்றது!... “ஈமம்‌” என்பது, மூடுதல்‌ வினையை அடிப்படையாகக்‌ கொண்டது ஆகும்‌!

உள்ளே வைத்து மூடப்பெறாத “தாழி” என்பதே இல்லை! எல்லாம்‌ மூடப்பெற்றவைதாம்‌! அனைத்தினுள்ளும்‌ பெரும்பண்பும்‌ பேரறிவும்‌ உயிரினிக்கும்‌ அன்பு உணர்வும்‌ வாய்த்திருந்த நம்‌ முன்னோர்‌ அடக்கம்‌ செய்யப்‌வபற்றுள்ளனர்‌! 


கடுங்களிமண்‌ சேற்றுக்‌ கட்டியை எடுத்து. உருண்டையுருவாக உருட்டிக்கொண்டு அவ்வுருண்டையை மெல்ல மெல்லக்‌ குடைந்து உட்பகுதி மண்ணைத்‌ தோண்டியெடுத்துக்‌ காயவைத்துப்‌, பின்னர்‌ விறகு செத்தை - சருகுகளால்‌ மூடித்‌ தீயிட்டு வேக்கித்‌ தீடமான குடமாக வைளியிலைடுத்துப்‌ பயன்படுத்தத்‌ தொடங்கிய உலகின்‌
முதல்மாந்தர்‌ நம்‌ மூதாதியர்‌ என்னும்‌ உண்மையை,உலகினர்‌ அனைவரும்‌ அறிந்துகொள்ளுதல்‌ வேண்டும்!

 

“குடம்‌” என்னும்‌ சொல்லே - குடைதல்‌ எனும்‌ வினைக்‌ கருத்து அடிப்படையில்‌ தோன்றியுள்ளது! “குழிசி” என்றவாறு பானையைக்‌ குறித்து வழங்கிய தமிழ்ச்சசொல்லும்‌ குழிப்படுத்திய, மட்கலம்‌ டபொருஸ்‌ என்னும்‌ கருத்தினை அடிப்படையாகக்‌ கொண்டதுவே! “கலம்‌” என்னும்‌ சொல்லுக்குள்ளும்‌ கல்லுதலாகிய தோண்டூதல்‌ கருத்தே உட்கருவாகக்‌ கிடக்கின்றது! “நோண்டி” என்னும்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டுப்‌ பரவற்‌ சொல்லுக்குள்ளும்‌, உலகிலேயே முதன்முதலில்‌ கலத்தினை - அதாவது மண்கலத்தினைச்‌ செய்து பயன்படுத்தியவர்‌ நம்முடைய முன்னோரே என்னும்‌ உண்மையும்‌ புதைந்து கிடக்கின்றமையைச்‌ சற்றே உற்று எண்ணினாலும்‌ உணரமுடியும்‌ !... “தாழி” :
என்னப்பெறும்‌ என்னுடைய கலவகையில்‌ பதின்மூன்று எண்ணிக்கையிலான மண்கலப்‌ பெயர்வகைகள்‌ இன்றைய தமிழக மக்களின்‌ பேச்சுவழக்கிலும்‌, மரபுத்‌தொடர்ச்சிகளைப்‌ பதிவுசெய்துவைத்துள்ள இலக்கிய வழக்கிலும்‌ - தொல்லியற்‌ பதிவு வழக்கிலும்‌ பரவலான பதிவுகளாக நீன்று பயன்பாடூ கொண்டுள்ள உண்மையை, உலகினர்‌ யாவரும்‌ உணர்தல்‌ வேண்டும்‌!

இவ்‌ வழக்காறுகளுள்‌ ஒன்றான “ஈமத்தாழி'' என்றவாறு தொன்முதுகாலத்திலேயே சுட்டப்‌ பெற்றவளான நானே, இன்று பண்டைப்‌ பழம்‌ பழைய புதைவிலிருந்து வெளிவந்து நிலைநீன்று உங்கள்‌ சிந்தனைக்கென எண்ணத்திற்கென -  ருத்திற்கெனச்‌ சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றேன்‌! பெருமைக்குரிய அன்பு மாந்தர்களே ! இதனை நன்றாக நினைவில்‌ நிறுத்துங்கள்‌ ! இலக்கக்‌ கணக்கினரான பெரும்பெருஞ்‌ சான்றோர்கள்‌ - ஆன்ற அறிஞர்கள்‌ - அறிவியல்‌ நோக்கார்ந்த நுண்ணியர்கள்‌ - அறநெறியில்‌ நிலைநின்று வாழ்வியல்‌ - உலகியல்‌ பற்றிய கருவுண்மைகளைக்‌ கண்டறிந்து அம்‌ மைய்ம்மங்களை வெளிப்படுத்திய முனைவர்கள்‌ என்றவாறு, மிகப்‌ பெரும்பாலோர்‌ ஆகிய நம்‌ முதுமுன்னோர்கள்‌ என்‌ போன்ற ன அடக்கமாயினர்‌ ! *அவர்கள்‌ அனைவரும்‌ - தம்‌ பிறங்கடையினராகிய நாம்‌, நலமும்‌ வளமும்‌ மனச்‌சசழுமையும்‌ உடையோராகச்‌ சிறந்து வாழவேண்டும்‌ என்று நினைந்து, உய்ந்து மேம்படுதற்கெனப்‌ படைத்தளித்த அறிவுக்‌ களஞ்சியங்களை மதிப்பேோடு பயன்படூத்தினோமா?... அவர்களின்‌ நாகரிகப்பாங்குகளை அவர்கள்‌ மேற்கொண்டொழுகிய பண்பாட்டுமூறைகளை நாம்‌ நம்‌ வாழ்க்கையில்‌ மேற்கொள்ளுதற்குச்‌ சற்றேனும்‌ முயற்சி மேற்கொண்டோமா? அவர்களின்‌ நோக்கங்களை எண்ணிப்‌ பார்த்தோமா? நாம்‌ எதனையுமே  செயற்படுத்த முனையவில்லையே! அவைபற்றிலயல்லாம்‌ சிந்திக்கவே நமக்கு நேரமில்லாது போயிற்றே!

...

நம்‌ பண்டைய மாட்சிமையை நாம்‌ உணருவது எப்போது ?... நம்‌ மறத்தை - அறத்தை - மாண்பை - மானத்தை - ஈகப்‌ பேருணர்வைத்‌ தெளிவாக உணர்வது எப்போது?... உங்களின்‌ பெருமைக்குரிய திறமும்‌ அறமும்‌ செறிந்த முதுமுன்னோர்களைச்‌ சுமந்து புதைபட்டுக்‌ கிடக்கும்‌ தாழிகளாகிய ஈமப்‌ பேழைகளின்‌ சார்பாகப்‌- புத்துணர்வு எழுச்சியுடனும்‌ பண்டைப்‌ பழைய வீரவுணர்வுடனும்‌ - தெளிவார்ந்த உணர்வுப்‌ பெருக்கம்‌ வாய்ந்த நல்லூக்கத்துடனும்‌- வேட்கையுடனும்‌ செந்தீறத்‌ தாழியாகிய நான்‌ உங்கள்முன்‌ ஒரு நம்பிக்கையுடன்‌ நிலைநிற்கின்றேன்‌!...

- தொடர்புக்கு -

 தாழி”

bottom of page